முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து கோலி விலகல்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

புதுடெல்லி : தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இருந்து விராட் கோலி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த வீரர்களுக்கு....

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்தவுடன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகக்கோப்பையில் பங்கேற்ற பெரும்பாலான மூத்த இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ஓய்வு எடுக்கிறார்...

இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து  3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியா விளையாட இருக்கிறது. இந்த தொடர் டிசம்பர் 10-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில்,  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து பி.சி.சி.ஐ.யிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து