முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி கேப்டனாக ரோகித்தை நியமித்தது ஏன்? - முன்னாள் தலைவர் கங்குலி விளக்கம்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

கொல்கத்தா : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ள பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கோலி ராஜினாமா...

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்த பின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரும் சர்ச்சை... 

இந்த சர்ச்சையை தொடர்ந்து 2022ம் ஆண்டு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும், அப்போது, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த சவுரவ் கங்குலி மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

விரும்பவில்லை... 

இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டது குறித்து பி.சி.சி.ஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சவுரவ் கங்குலி, நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. இது குறித்து நான் பல முறை கூறியுள்ளேன். இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட விராட் கோலி விரும்பவில்லை. கோலி அந்த முடிவு எடுத்த பின்னர் நீங்கள் டி20 கேப்டனாக செயல்பட விரும்பவில்லையெனில் ஒட்டுமொத்தமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் மற்றும் டி20) விலகுவது நல்லது என்று நான் கூறினேன். 

ரோகித் சர்மாவை... 

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு (ஒருநாள் மற்றும் டி20) தனி கேப்டன், சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்கு (டெஸ்ட்) தனி கேப்டன் இருக்கட்டும் என்றேன். 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவி வகிக்க விராட் கோலி விரும்பாததால் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பேற்கும் படி நான் கூறினேன். இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படவே நான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டேன். அந்த பணியில் இது ஒரு சிறிய பகுதி' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து