Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சியின் விவாதத்தில் விவேக் ராமசாமி முன்னிலை

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      உலகம்
Vivek-Ramasamy-2023-12-07

வாஷிங்டன், அமெரிக்க  அதிபர் தேர்தலையொட்டி அலபாமாவில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சியில் விவேக் ராமசாமி முன்னிலை பெற்றார்.  

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வேட்பாளர்  போட்டியில் டிரம்புக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்து களமிறங்கி உள்ளனர்.

அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதால், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது விவாதத்திலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த பிரசாரத்தில் ஆரம்பம் முதலே விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

அவ்வகையில், குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான நான்காவது விவாத நிகழ்ச்சி அலபாமாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் பங்கேற்று விவாதித்தனர். 

இந்த விவாதத்தில் விவேக் ராமசாமி, டிசாண்டிஸ் ஆகிய இருவரும் முன்னிலை பெற்றனர். விவாதத்தின்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காரசாரமாக கருத்துக்களை முன்வைத்தனர். நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அவர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை இந்த விவாதம் கோடிட்டு காட்டியது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து