முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் லல்லு குடும்பத்தோடு வழிபாடு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Lallu-Prasad 2023-12-09

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் குடும்பத்தோடு நேற்று வழிபாடு மேற்கொண்டார். 

2004 முதல் 2009 வரையில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வேயில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்ற வழக்கில், கைது செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

இந்த நிலையில், லல்லு பிரசாத் யாதவ் தனது மனைவி, மகன் உள்பட குடும்பத்தினரோடு நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.  அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் யாதவ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

பிரார்த்தனை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், 

திருமண நாளான இன்று(நேற்று) எனது குடும்பத்தினருடன் திருப்பதி பாலாஜி கோவிலில் வணங்கி, தரிசனம் செய்ததன் மூலம் வேங்கடேச பெருமாளின் ஆற்றலையும், ஆசீர்வாதத்தையும் பெற்றேன். மாநில மக்களின் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம் என்று  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து