முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் : முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Revanth-Reddy 2023-12-09

Source: provided

திருப்பதி : தெலுங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பேருந்து பயண திட்டத்தை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். 

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2500 உரிமைத்தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் தேர்தலின் போது அளிக்கப்பட்டன.

தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவேந்த் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். சோனியா காந்தி பிறந்த நாளான நேற்று பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பஸ் திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ் என அரசின் அனைத்து வகை பஸ்களிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களில் பயணிக்கும் போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், 3-ம் பாலினத்தவரும் வயது வித்தியாசமின்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள். 

இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஜீரோ டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து