முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவ மழை: சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Rain 2023-08-17

Source: provided

சென்னை : வடகிழக்கு பருவ மழையின் மூலம் சென்னையில் இயல்பை விட 48 சதவீதம் அதிகமாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர்) தென் மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் மூலம் சென்னையில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நேற்று வரை சென்னையில் 107.9 செ.மீ  மழை பதிவாகியுள்ளது. ஆனால் இயல்பாக 72.6 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். இது இயல்பை விட 48 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து