முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல்: போட்டியிட விரும்புபவர்கள் வரும் 19-ம் தேதி முதல் விருப்ப மனு பெறலாம்: தி.மு.க அறிவிப்பு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024      தமிழகம்      அரசியல்
Duraimurugan 2022 12 11

சென்னை, மக்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெறலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

மக்களவை  தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.  

தமிழகத்தில் தி.மு.க தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம். எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தி.மு.க ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை பெறலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 1 -ம் தேதி முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அதே போல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து