முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று துவக்கம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Bhagwati-Amman 2024-02-16

Source: provided

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா இன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்கல்  திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். 

இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்கல் விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா இந்த ஆண்டு இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.

லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைக்கும் வழிபாடு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள். 

இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ம் தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. 

விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து