முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      விளையாட்டு
18-Ram-84

Source: provided

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

பந்துவீச்சு தேர்வு...

8 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் (யு.ஏ.இ.) மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த அமீரக கேப்டன் வாசீம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஷகீன்ஷா அப்ரிடி... 

இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சைம் அயூப் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பர்ஹான் 5 ரன்னில் அடங்கினார். இதன் பின்னர் பஹர் ஜமான் (50 ரன்), கேப்டன் சல்மான் ஆஹா (20 ரன்) சரிவை சமாளித்தாலும் பின்வரிசை வீரர்கள் திணறினர். கடைசி கட்டத்தில் ஷகீன்ஷா அப்ரிடி 29 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து சவாலான ஸ்கோருக்கு உதவினார். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

105 ரன்களில்... 

பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யு.ஏ.இ. அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 2 விக்கெட் கைப்பற்றியதுடன் இறுதி கட்டத்தில் பேட்டிங்கிலும் அசத்திய ஷாகீன் அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சூப்பர் 4 சுற்றுக்கு... 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி கண்ட பாகிஸ்தான் ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே இந்த பிரிவிலிருந்து முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுவிட்டது. யு.ஏ.இ. மற்றும் ஓமன் அணிகள் முறையே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெறியேறியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து