முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      தமிழகம்
TN-Assembly 2024-12-04

Source: provided

சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசன பகுதிகளில் மொத்தம் 21,867 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் 4233.60 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி புதிய பாசன பகுதிகளில் மொத்தம் 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி முதன்மை கால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 2661.12 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 19.09.2025 முதல் 31.01.2026 வரையிலான காலத்தில் மொத்தம் 134 நாட்களில், 70 நாட்கள் தண்ணீர் திறப்பு, 64 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற அடிப்படையில், மொத்தம் 6894.72 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து, பாசனத்திற்காக, தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தகவல், தமிழக அரசு நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டு உள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து