Idhayam Matrimony

உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2025      விளையாட்டு
18-Ram-80

Source: provided

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகரில்...

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடந்தது. இறுதிப்போட்டியை எட்டுவதற்கான தூரம் 84.50 மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை எட்ட வேண்டும் அல்லது அதிக தூரம் வீசும் டாப்-12 வீரர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். இதில் மொத்தம் 37 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இலக்கை அடைந்தார்... 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட நடப்பு சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தகுதி இலக்கை அடைந்தார். பதக்கத்துக்கான இறுதிப்போட்டி நேற்று நடந்தது . இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மிக மோசமாக செயல்பட்டார். முதல் வாய்ப்பில் 84.03 மீட்டர் தூரம் வீசினார் நீரஜ் சோப்ரா. தொடர்ந்து மற்ற வாய்ப்புகளில் அவர் 84.03 மீட்டருக்கும் குறைவாகவே வீசினார். இதனால் நீரஜ் சோப்ராவின் அதிகபட்சம் 84.03 மீட்டராக எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரசிகர்கள் அதிர்ச்சி...

இதனால் நீரஜ் சோப்ரா 8வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் . பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ் 86.27 தூரம் வீசி 4வது இடம் பிடித்த்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து