எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மே.தீவுகள் அணி அறிவிப்பு
நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அணிகள் தங்களுக்குள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளன. இந்த டி20 தொடரானது ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முக்கிய வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு, அணியில் 5 அறிமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களான சாய் ஹோப், அல்சாரி ஜோசப், மற்றும் ஜான்சன் கார்ல்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியை சுழற்பந்துவீச்சாளர் அகீல் ஹொசைன் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அறிமுக வீரர்களாக பேட்டர் அக்கீம் அகஸ்டி, ஆல்ரவுண்டர் நவின் பிடாய்சி, சுழற்பந்துவீச்சாளர் ஸீஷன் மொட்டாரா, வேகப் பந்துவீச்சாளர் ரமோன் சிம்மண்ட்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் அமீர் ஜாங்கோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனா மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுத்திக்கு முன்னேறியுள்ளார். சீன மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் இந்தியாவின் பி.வி.சிந்து- தாய்லாந்தின் சோசூவாங் மோதினார்கள். 41 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் கேம்களில் அசத்தலாக வெற்றி பெற்றார்.
தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து 6-ஆவது இடத்தில் இருக்கும் சோசூவாங்கை வென்றதன் மூலம் அவருடனான மோதலில் 6-5 என தனது ஆதிக்கத்தையும் நீட்டித்துள்ளார். காலிறுதியில் பி.வி.சிந்து டாப் ரேங்கில் இருக்கும் கொரியாவின் அன் சே யங் அல்லது டென்மார்க்கின் மியா பிலிச்பெல்ட் உடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது சாலா புதிய சாதனை
சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் கால்பந்து வீரரரும் எகிப்திய அரசன் என்று அழைக்கப்படும் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்லெடிகோ மாட்ரிட் உடனான போட்டியில் லிவர்பூல் அணி 3-2 என த்ரில் வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் தனது முதல் போட்டியில் லிவர்பூல் அணி, ஜூலியன் அல்வராஸ் இல்லாத அத்லெடிகோ மாட்ரிட் உடன் மோதியது. இந்தப் போட்டியில் முகமது சாலா 4-ஆவது நிமிஷத்தில் ஓர் அசிஸ்ட்டும் 6-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தும் அசத்தினார்.
இதன்மூலம், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இங்கிலாந்து நாட்டின் கிளப் அணிகளில் 6 நிமிஷங்களில் ஓர் அசிஸ்ட், ஒரு கோல் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனைக்கு முகமது சாலா சொந்தக்காரர் ஆகியுள்ளார். அத்லெடிகோ மாட்ரிட் சார்பில் 45+3, 81-ஆவது நிமிஷங்களில் மார்கோஸ் லொரேன்டா கோல் அடித்து 2-2 என சமன்படுத்த, 90+2-ஆவது நிமிஷத்தில் வான் டிஜிக் கோல் அடித்து வெற்றிப் பெறச் செய்தார்.
கோப்பையை வெல்வோம்: சமாரி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது இலங்கை அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுவதால், இலங்கை அணிக்கு மிகவும் சாதகமான சூழலே உள்ளது. துணைக் கண்டத்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை நாங்கள் நன்கு அறிவோம். எங்களது அணியில் மூத்த வீராங்கனைகள் மற்றும் இளம் வீராங்கனைகள் என இருதரப்பும் சமபலத்துடன் உள்ளோம். இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


