முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரம்:சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை:மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கடுமையாக எதிர்த்ததாக குறிப்பிட்டார்.  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும், மேகதாது விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கடுமையாக எதிர்த்தோம் எனவும் கூறினார். மேலும்,  தான் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் பதிலளிக்கத் தயாராக இருந்தும் அதனைத் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.  இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு அவை முன்னர் துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது அவர்,  காவிரி ஆணையமே கூடாததால் அ.தி.மு.க. ஆட்சியில் பிரச்சனை வரவில்லை என கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்,  காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.  தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியே காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது குறித்து விவாதித்தது.  தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

இதையடுத்து,  மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து