முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து முகமது ஷமி விலகுகிறார்?

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      விளையாட்டு
22-Ram-52

Source: provided

காந்திநகர்:காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் முகமது ஷமி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

10 அணிகள்...

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ளது.  இந்த தொடரில் சென்னை,  கொல்கத்தா,  டெல்லி,  மும்பை, ஹைதராபாத்,  குஜராத் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன.  ஐபிஎல் தொடருக்காக கிரிக்கெட் வீரர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.  விபத்து காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக விளையாடாமல் இருக்கும் டெல்லி கேபிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த முறை ஐபிஎல் தொடரில் களம் இறங்க உள்ளார்.

காயம் காரணமாக.... 

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரரும்,  இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான முகமது ஷமி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

விலகும் கட்டாயத்தில்...

இருப்பினும் அவர் ஊசி எடுத்துக் கொண்டு விளையாடினார்.  ஆனால் தற்போதைய சூழலில் அவர் கட்டாயம் தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும்,  இதனால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து