முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் அறிக்கை: பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பாரதிய ஜனதா கட்சி

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பாரதிய ஜனதா கட்சி.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் முக்கிய அம்சமாக கருதப்படும் தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் பா.ஜ.க. ஆலோசனைகளை கேட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரசார வேன்களை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நட்டா, நாட்டின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி செய்த பணிகள் மற்றும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இந்த வீடியோ வேன்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்றார். மேலும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அதற்கான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து