முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சாதனைகள்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

ராஞ்சி : ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் வென்று ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நிலை நிறுத்தி வந்துள்ளது. ராஞ்சி வெற்றியைத் தொடர்ந்து சில சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

சுனில் கவாஸ்கர்... 

இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 971 ரன்களைக் குவித்து, இதற்கு முன்னால் சாதனையை வைத்திருந்த லிட்டில் மாஸ்டர் சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்துள்ளார். கவாஸ்கர் தன் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்களை எடுத்து 8 டெஸ்ட் போட்டிகளில் 938 ரன்களை எடுத்திருந்ததுதான் 8 டெஸ்ட் ரன்களில் சாதனையாக இருந்தது. இப்போது ஜெய்ஸ்வால் இந்த மகுடத்தைச் சூட்டிக் கொண்டார். ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் தன் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் 1210 ரன்களை எடுத்து முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால் இப்போது சாதனையாளராக மிளிர்கிறார்.

17 டெஸ்ட் தொடர்கள்... 

200 அல்லது அதற்கு சற்று குறைவான இலக்கை விரட்டி வெற்றி பெற்ற வகையில் இந்தியா 33 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 30 போட்டிகளை வென்றுள்ளது. இந்தியாவில் இந்திய அணி 17 டெஸ்ட் தொடர்களை வென்று உள்நாட்டு தாதாவாக சாதனைப் படைத்துள்ளது. 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றதிலிருந்து தொடங்கிய வெற்றிச் சரமாகும் இது. இதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டில் வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா 1994-2000, 2004-2008-ல் பத்து டெஸ்ட் தொடர்களில் உள்நாட்டில் வென்று சாதனையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

13வது முறை...

46 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின் தங்கியிருந்து இரண்டாவதாக பேட் செய்த வகையில் டெஸ்ட் போட்டியை வென்ற பின்னிலையில் 7-வது அதிக பின்னிலையாகும். இரண்டாவதாக பேட் செய்து போட்டியை வென்றது அதுவும் முதல் இன்னிங்ஸில் எதிரணிக்கு முன்னிலை அளித்து வெற்றி பெறுவது 13வது முறையாகும். ஆட்ட நாயகன் விருது வென்ற அறிமுக விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் 23 வயது 33 நாட்களில் டெஸ்ட் ஆட்ட நாயகன் விருது வென்ற 5வது இளம் விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். 2002-ல் அஜய் ராத்ரா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்லும் போது அவருக்கு வயது 20.

ரோகித் சர்மா... 

ரோகித் சர்மா ராஞ்சி டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் எடுத்த 55 ரன்கள் 4-வது இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். 2021 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் 52 ரன்களை எடுத்த பிறகு 4-வது இன்னிங்ஸ் அரைசதமாகும் இது. மேலும் வெற்றிகரமான 4வது இன்னிங்ஸ் விரட்டலில் கேப்டனாக ரோகித் சர்மாவின் 55 ரன்கள் கங்குலியின் கேப்டன் சாதனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து