முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோஷ்வா இமை போல் காக்க விமர்சனம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      சினிமா
Joshua-Imai-Pol-Kakka-revie

Source: provided

வெளிநாட்டில் வாழும் வாழும் நாயகன் நாயகி ராஹேவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக்கொள்கிறார்கள். நட்பாக பழகும் இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது. காதலியிடம் தான் யார்? என்ற உண்மையை வருண் சொல்லும் போது, அவர் பயந்துபோய் அவரை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். இதற்கிடையே பிரிந்து சென்ற காதலியின் உயிருக்கு சர்வதேச குற்றவாலியின் மூலம் ஆபத்து வருகிறது. காதலியின் உயிரை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கும் வருண், தனது காதலியோடு மீண்டும் சேர்ந்தாரா? இல்லையா?, அவரது காதலியை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்?, வருண் பற்றிய உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை அதிரடியாக சொல்வது தான் ‘ஜோஷ்வா : இமை போல் காக்க’. படம்

மிகப்பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் காதலியை காப்பாற்றும் கதாநாயகன்” என்ற ஒரு கதையை கொண்டு மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கௌதமேனன். நாயகனாக நடித்திருக்கும் வருண், கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆக்‌ஷன் காட்சிகள் படத்தை ஆட்கொள்ள, நாயகன் வருண் அதன் பின்னால் ஓட ஆரம்பித்து விடுகிறார். ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் ஓவ்வொரு ரகத்தில் சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை மிக சிறப்பாக கையாண்டிருக்கும் வருண், சண்டைக்காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென், இயக்குநர் கெளதம் மேனனுக்கு இணையாக படத்தில் உழைத்திருக்கிறார்.

தனது ஒவ்வொரு படங்களிலும் காதல் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை உருக வைக்கும் இயக்குநர் கெளதம் மேனன், இதில் காதல் காட்சிகளை குறைத்து அதீத சண்டைக்காட்சிகளில் ரசிகர்கள் உருக வைக்க முயற்சித்திருக்கிறார் மொத்தத்தில் இந்த ஜோஷ்வா ஆக்ஷனை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து