முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாலியன்வாலாபாக் படுகொலை தினம்: ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Modi 2024-04-13

Source: provided

புதுடெல்லி : பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக்கில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ல் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பிரிட்டிஷ் படையினரால் முன்னறிவிப்பு எதுவுமின்றி சுட்டு கொல்லப்பட்டனர். 

பொதுமக்களுடைய சுதந்திர நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வகை செய்கிற, காலனி நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்க கூடிய, ரவுலட் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராடி வந்த போது, இந்த கொடூர படுகொலை சம்பவம் நடந்தது.  இதில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆண், பெண் பேதமின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜாலியன்வாலாபாக்கில் தாய்நிலத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.

சுயராஜ்ஜியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைத்து பேராத்மாக்களுக்கும் நாட்டு மக்கள் எப்போதும் கடன்பட்டுள்ளனர்.  வீரமரணம் அடைந்தவர்களின் நாட்டுப்பற்றுக்கான மனவுறுதியானது, வருங்கால தலைமுறையை எப்போதும் ஊக்கப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ஜனாதிபதி முர்மு தெரிவித்துள்ளார்.  

ஜாலியன்வாலாபாக் படுகொலை நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

நாடு முழுவதுமுள்ள என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் சார்பில், வீரமரணம் அடைந்த அனைவருக்கும் மனதின் ஆழத்தில் இருந்து என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.  மேலும் ஜாலியன்வாலாபாக் சம்பவத்தின் போது ஈடுஇணையற்ற தைரியம் மற்றும் தியாகம் ஆகியவற்றை மக்கள் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றையும் அந்த பதிவில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து