எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.,
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திடும் வகையில் 1958-ஆம் ஆண்டு ஆட்சி மொழிக்குழு உருவாக்கப்பட்டு, ஓர் ஆய்வுத் தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் 1972 இல் இப்பணியிடத்துடன் சேர்த்து ஒன்பது ஆய்வுத் தனியலுவலர் பணியிடங்களாக உருவாக்கப்பட்டன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலர் என்ற பதவிப் பெயரினை மாற்றி ஒருமுகமாக உதவி இயக்குநர் பணியிடங்கள் என 1998 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட அரசாணை வெளியிடப்பட்டது.
இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் நேற்று வழங்கினார். தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான நற்காலம் மட்டுமல்ல பொற்காலமுமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


