Idhayam Matrimony

சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      இந்தியா
Stalin 2024-12-04

சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், பைரோஜி அக்ரஹாரம் குரூப் கிராமத்தில் உள்ள அரசம்பாளையம் மலை அடிவாரத்தில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் குளித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மின்னக்கல் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரின் மகன்கள் நிஷாந்த் (வயது 23) மற்றும் பிரசாந்த் (வயது 19) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இம்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து