முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று சண்முகருக்கு அன்னாபிஷேகம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-04-13

Source: provided

திருச்செந்தூர் : தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் இன்று சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. 

காலை 8.30 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.

கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, 8.30 மணிக்கு தேவார இன்னிசை, காலை 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பொது விவரக்குறிப்பேடு வெளியிடப்படுகிறது. மாலை 3 மணிக்கு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து