முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும் : பொது சுகாதாரத்துறை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Vaccination 2024-04-16

Source: provided

சென்னை : சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிர் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். 

அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து