முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Sahu 2023-10-27

Source: provided

சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில்  இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை  ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில்  இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

 தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களுக்கு சென்று தபால் வாக்குகளை பதிவு செய்யலாம். 

39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து