முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      இந்தியா
Pallavi 2024-04-17

Source: provided

பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.

தெற்கு கோவா தொகுதியில் பா.ஜ., சார்பில் பல்லவி (49) என்பவர் போட்டியிடுகிறார். இதற்காக அவர், வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் சொத்து குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில், கணவருடன் சேர்ந்து தனக்கு ரூ.1,400 கோடி சொத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பல்லவிக்கும், கணவர் ஸ்ரீநிவாஸ் டெம்போவுக்கும் கால்பந்து, ரயில் எஸ்டேட், கப்பல் கட்டும் தொழில், கல்வி முதல் சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளோம். பல்லவிக்கு சொந்தமாக ரூ.255.4 கோடி மதிப்பு அசையும் சொத்து உள்ளது. இவரின் அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.28.2 கோடி.

ஸ்ரீநிவாசுக்கு ரூ.994.8 கோடி மதிப்பு அசையும் சொத்து உள்ளது. இவரின் அசையா சொத்தின் சந்தை மதிப்பு ரூ.83.2 கோடி ஆகும். கோவாவில் உள்ள சொத்துகளை தவிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் இந்த தம்பதிக்கு சொத்து உள்ளது. இதனைத் தவிர்த்து துபாயில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள குடியிருப்பும், லண்டனில் ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது. பல்லவியிடம் ரூ.5.7 கோடி மதிப்பு தங்கம் உள்ளது. புனே பல்கலையில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து