முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2024      தமிழகம்
bus-2022 08 25

சென்னை, கோவை, ஈரோடு,  ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்டணமின்றி  பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் இன்று (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த நிலையில், கோவை, ஈரோடு,  ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கட்டணமின்றி  பயணிக்கலாம் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது., “19.04.2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்க பயணம் மேற்கொள்ளும் 60 வயத்திற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் நமது போக்குவரத்து கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் எவ்வித பயணச்சீட்டும் வழங்காமல் கட்டணமின்றி 19.04.2024 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை வாக்களிக்க அழைத்துச் செல்ல அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து