முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Congress 2023 03 25

Source: provided

ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.

மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் 38 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் 10 தொகுதியில் வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ஏற்கனவே 114 பேரை அறிவித்திருந்த நிலையில், இதுவரை 142 பேரை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முலாம் ரெட்டி துருவரெட்டி, முதல்வர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து புலிவெந்துலா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

கடப்பா மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள தொகுதிகளில் புலிவெந்துலாவும் ஒன்று, அங்கு முதல்வர் ரெட்டியின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி தனது உறவினரும், ஒய்எஸ்ஆர் வேட்பாளருமான அவினாஷ் ரெட்டியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து