முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      விளையாட்டு
Kolkata 2024-04-30

Source: provided

கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

டெல்லி பேட்டிங்...

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுனில் நரைன்....

கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது. 154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

எளிதில் வெற்றி...

இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ரன்களை குவித்தனர். இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

புள்ளிப்பட்டியலில் 2-வது இடம்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை முடிந்த 47 லீக் ஆட்டங்களில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று 3, 4, 5, 6-வது இடங்களில் உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணிகள் தலா 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து