முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஒருவர் கொலை : இணையதள சேவை துண்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      இந்தியா
Bihar 2024 05 21

Source: provided

பாட்னா : பீகாரின் சரண் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் படுகாயமடைந்தனர். வன்முறை காரணமாக அம்மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பீகார் மாநிலத்தில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சரண் பார்லி. மக்களவைத் தொகுதியில் மகாகத்பந்தன் கூட்டணி (இன்டியா கூட்டணி) வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் எம்.பி- ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகிறார்.

தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று காலை, சரண் தொகுதிக்கு உள்பட்ட பீகாரி தாக்கூர் சௌக் அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் வன்முறை ஏற்பட்டது. வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக பாஜக மற்றும் ஆர்ஜேடி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். மேலும், படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா கூறியுள்ளார். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து