முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
Iran 2024 05 21

டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பிய போது அஜர்பைஜான் - ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது.

இப்ராகிம் ரைசி மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் முகமது முக்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரானின் அரசியலமைப்பின் 131-வது பிரிவின்படி, அதிபர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், துணை அதிபர் அவரின் கடமைகளை செய்ய அதிகாரமுடையவர் ஆவார். 

மேலும், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இடைக்கால அதிபர் கடமைப்பட்டவர் ஆவார். 

இந்நிலையில், ஈரானின் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், தேர்தலுக்கான பிரச்சாரம் ஜூன் 12-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து