முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போஸ்டர் வெளியிட்ட படக்குழு: ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படம் - ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பம்

திங்கட்கிழமை, 20 மே 2024      சினிமா
NTR 2024-05-20

Source: provided

சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். 1991-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

அவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இந்தியா முழுவதும் மெகா ஹிட் ஆனது. வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் தற்போது  ஜூனியர் என்.டி.ஆர். தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆரின் 31- வது படத்தை கே.ஜி.எப் பட டைரக்டர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் சூட்டிங் ஆகஸ்டில் துவங்கும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து