முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சரிவு

வியாழக்கிழமை, 30 மே 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 53,840 -க்கு விற்பனையானது.

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.  குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து தங்கம் விலை ஏறியும், இறங்கியும் காணப்பட்டது.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 280 உயா்ந்து ரூ. 54,200க்கு விற்பனையானது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு  ரூ.360 குறைந்து ரூ. 53,840 -க்கும்,  கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 6,730 -க்கும் விற்பனையானது. அதேபோல்,  வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ. 101 -க்கும்,  ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,200 குறைந்து ரூ. 1,02,200 -க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து