முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னி விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மே 2024      சினிமா
Kanni-review 2024-05-20

Source: provided

கதையின் நாயகி அஷ்வினி சந்திரசேகர், குழந்தை மற்றும் இளம் பெண் ஒருவருடன், மனித நடமாட்டம் இல்லாத மலைப்பாதையை கடந்த தனது தாத்தா இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார். மக்கள் குறைவாக இருக்கும் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் பல சிதிலமடைந்து, பராமரிப்பு இன்றி இருக்கிறது. இதற்கிடையே, அந்த கிராமத்திற்கு வரும் சில இளைஞர்கள் குறும்படம் எடுக்கப் போவதாக சொல்லி, அந்த வீடுகளை வீடியோ எடுக்கிறார்கள். அவர்களுக்கு நாயகியின் தாத்த உதவி செய்கிறார்.

இந்த நிலையில், நாயகியுடன் வந்த இளம் பெண் திடீரென்று மாயமாக, அவரை தேடும் போது, குறும்படம் எடுப்பதாக சொன்ன இளைஞர்களில் ஒருவர் அந்த இளம் பெண்ணை தாக்க, அவரிடம் இருந்து இளம் பெண்னை காப்பாற்றும் நாயகி அவரை கொலை செய்துவிடுகிறார். மாயமான இளைஞரை தேடி மேலும் பலர் அந்த கிராமத்திற்கு வருவதோடு, நாயகி அஷ்வினியை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கும் நாயகிக்கும் என்ன தொடர்பு, அவர்கள் அஸ்வினியை பிடிக்க முயற்சிப்பது ஏன்? என்பது தான் ‘கன்னி’ படத்தின் மீதிக்கதை.

சேம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வினி சந்திரசேகர், தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று மலைவாழ் பெண் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

படக் குழுவினர் எளிதில் நுழையாத லொக்கேஷன்களில் தேடிப் போய் படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், கிராம மக்களை நடிக்க வைத்திருப்பது, ஆபாசக் காட்சிகள் இல்லாமல், கதைக்களத்தின் இயல்பு தன்மை மாறாமல் இருப்பதற்காகவே, கிராம மக்களை அவர்களாகவே நடிக்க வைத்திருப்பதோடு, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளை பேச வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் படம் தனித்து நிற்கிறது.

மொத்தத்தில், இந்த ‘கன்னி’ அனைவராலும் பேசப்படும் படமாக மாறி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து