முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு தகவல்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதே திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கங்களில் ஒன்று என்று விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்.

மத்திய அரசு 2025-2026-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் நெல் கொள்முதல் விலையைவிட விவசாயிகளுக்கு கூடுதல் விலை வழங்கும் திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தினார்.

கலைஞர் வழியில் தமிழ்நாட்டின் நலம் காத்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இந்த ஆண்டில் நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545 என உயர்த்தி உள்ளார். அதே போல, பொதுரக நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500 என உயர்த்தியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் 1.9.2025 முதல் 31.8.2026 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.

இதற்கான முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு 29-ந்தேதி அன்று அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, இந்த ஆண்டில் விவசாயிகளிடமிருந்து மொத்தம் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதில் சன்ன ரக நெல் 30 லட்சம் மெட்ரிக் டன். பொதுரக நெல் 12 லட்சம் மெட்ரிக் டன்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில் 2024-2025 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுஉள்ளது.

முதல்வரின் 51 மாத கால ஆட்சியில் இதுவரை மொத்தம் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44 ஆயிரத்து 777 கோடியே 83 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் திராவிட மாடல் அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஊக்கத் தொகை மட்டும் 2 ஆயிரத்து 31 கோடியே 29 லட்சம் ரூபாய் ஆகும்

முதல்வர் மு.க.ஸ்டாலின், அரும்பாடுபட்டு விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற உன்னத லட்சியத்துடன் கொள்முதல் செய்யப்படும் நெல்லை திறந்தவெளியில் வைத்திடக் கூடாது என்பதற்காக 827 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் 7 லட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்களைக் கட்டிஉள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தியுள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி இருவரும் நேற்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து