முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணவீக்கம், வேலையின்மைக்கு எதிராக வாக்களித்தேன்: கெஜ்ரிவால்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Kejriwal 2024-05-25

புது டெல்லி, பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

பாராளுமன்ற தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, அரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் நேற்று நடந்தது.  டெல்லியில் நேற்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்தனர். 

அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று  வாக்களித்தனர்.  

வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, 

எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார். 

மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து