முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

சனிக்கிழமை, 25 மே 2024      விளையாட்டு
PV-Sindhu 2023 08 02

Source: provided

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசானனை எதிர்கொண்டார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து 13-21 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பி.வி.சிந்து அடுத்த இரு சுற்றுகளை 21-16, 21-12 என கைப்பற்றியதுடன், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

_______________________________________________

தினேஷின் புதிய அவதாரம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார். தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________

ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியும், அைதராபாத் அணியும் மோதிகொண்டன.  இதில் ராஜஸ்தான் அணியை விழித்தி இறுதி போட்டிக்கு அைதராபாத் அணி தகுதி பெற்றது. இதனிடையே  சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

குவாலிபயர் முடியும் முன்பே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று, கொல்கத்தாவும்,  அைதராபாத் அணியும் களம் காண்பது போல வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.  அதன்படி, குவாலிபயர் போட்டிக்காக முதல் நுழைவாயிலில் ஐதராபாத், கொல்கட்டா அணிகள் பேனர்களும் மற்றொரு நுழைவாயிலில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளின் பேனரும் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகுதி சுற்றுக்கும்,  இறுதிப் போட்டிக்கும் இடையே ஒரே நாள் இடைவேளை உள்ளதால் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறிய நான்கு அணி பேனர்களும் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

_______________________________________________

வாக்களித்தார் எம்.எஸ்.டோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் சனிக்கிழமை வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் உடன் இருந்தார். மக்களவைத் தேர்தலில் 6-ம் கட்டமாக ஜார்க்கண்டில் உள்ள கிரிதி, தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்தரப் பிரதேசத்தில் 14, அரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________

சாஹலின் மோசமான சாதனை

ஐ.பி.எல். 2-வது தகுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் சாஅல் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவரது பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் மூன்று சிக்ஸர்களை அடித்தனர். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு யுஸ்வேந்திரா சாஅல் சொந்தக்காரர் ஆனார். அவரது பந்துவீச்சில் மட்டும் 224 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பியூஷ் சாவ்லா. அவரது பந்துவீச்சில் 222 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா (206 சிக்ஸர்கள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (202 சிக்ஸர்கள்) உள்ளனர்.

_______________________________________________

ராஜஸ்தான் வீரருக்கு அபராதம் 

சென்னையில் நடைபெற்ற 2வது தகுதிசுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி ஐதராபாத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ஷிம்ரன் அெட்மயருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் அவர் ஐ.பி.எல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து