முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கடும் பஞ்சம் எதிரொலி: குடிநீரில் காரை கழுவினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம்

புதன்கிழமை, 29 மே 2024      இந்தியா
Water 2024-05-29

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குடிநீரை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது, காரை கழுவுவது ஆகியவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 குழுக்களை அமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, இக்குழுவினர் வீடு வீடாக சென்று சோதனை செய்ய உள்ளனர். அப்போது, குழாய் மூலம் குடிநீரில் கார் கழுவுவது, தண்ணீர் தொட்டி நிரம்பி வடிய செய்தல், வீட்டு உபயோக குடிநீரை வணிக காரணங்களுக்காக பயன்படுத்துவது, வீட்டு கட்டுமான பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்துவது ஆகியனவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து