எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று நடிகை சபானா ஆஸ்மி, நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசம் மண்டி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகார் விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த விவசாய போராட்டம் குறித்து தவறாக பேசியதால் கங்கனாவை தாக்கியதாக குல்வீந்தர் கவுர் கூறினார். இதனிடையே குல்வீந்தர் கவுர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கங்கனா ரனாவத்திற்கு ஆதரவாக மூத்த பாலிவுட் நடிகை சபானா ஆஸ்மி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
எனக்கு கங்கனா ரனாவத் மீது உள்ள அன்பு குறையவில்லை. அவரை அறைந்த விவகாரத்தை கொண்டாடி வருபவர்களுடன் நான் சேர விரும்பவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகை சபானா ஆஸ்மியின் கணவரும், மூத்த திரைக்கதை எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் தன்னை மிரட்டினார் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எதிராக ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


