முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      உலகம்
Modi-4 2024-05-10

இஸ்லாமாபாத்,  இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று முன்தினம் (ஜூன் 09) ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவுகள் அதிபர் முகமது முய்சு, செஷல்ஸ் துணை அதிபர் அஹமது ஆபிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜகன்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாமல் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு நேற்று (ஜூன் 10) பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி 3வது முறையாக பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டதும் உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பாகிஸ்தான் வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்தது. இது குறித்து சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பியது.

இதற்கு, புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ரா கூறியிருந்தார். இதற்கு எதிர்மறையாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து