முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம்: மதுரை ஆதீனம் விளக்கம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      தமிழகம்
Mdu-Adeenam 2023 06 16

Source: provided

மதுரை : 'லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது' என மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது. வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன். இந்திரா தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். பா.ஜ., பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தியவுடன் பா.ஜ.,வுக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்காததால் தான் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. பிரதமர் மோடி எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார். ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன். பா.ஜ.,விற்காக நான் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதில்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து