Idhayam Matrimony

தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? செல்வபெருந்தகை பேச்சால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      தமிழகம்      அரசியல்
Selvabaru 2023-02-19

சென்னை, தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பேசியது: “துணிந்து நின்றால்தான், நாம் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட முடியும். அனைவரும் தலைவர் ராகுல் காந்தி பிரதமராகவில்லை என்ற கவலையுடன் இருக்கிறோம். காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

நம்மைப் போலவே, இந்த தேசத்தின் மக்களும் ராகுல் காந்திதான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், அவர் இன்று அரசியலைப் பார்க்கவில்லை. நான் உணர்ந்த வரை, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற பார்வை ராகுல் காந்திக்கு இருந்தது. அதைத்தான் தீரப்பார்வை என்று கூறுவார்கள். ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும், தூரப்பார்வையும் இருக்கிறது. கிட்டப்பார்வையும் இருக்கிறது.

இனிவரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது தேவையாக இருக்கிறது என்றால், உண்மை, ஒற்றுமை, உழைப்பு. ஒற்றுமை இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று நாம் ஆளுங்கட்சியாக கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலில் இருக்கிறோம். ஆனால், அங்கு தமிழகத்துக்கு நிகராக வெற்றி பெற முடியவில்லையே என்று பத்திரிகையாளர்கள் என்னிடத்தில் கேட்டனர். அதற்கு நான், தமிழகம் என்பது கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என அனைத்திலும் பின்னிப் பிணைந்திருக்கிறது. எப்போதெல்லாம் இந்த தேசத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழகம் எழுந்து நிற்கும்.

காங்கிரஸ் பேரியக்கத்துக்கு கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேறு. மற்ற கட்சிகளின் கொள்கை, கோட்பாடு வேறு. அதற்காக, நம்முடைய கட்சியை வலிமைப்படுத்தக் கூடாது; பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியைப் பேசக்கூடாது என்று சொன்னால், அது தவறு. பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி குறித்து பேசுவது என்னுடைய தார்மிக உரிமை. நாங்கள் காமராஜர் ஆட்சியை அமைக்கமாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம், இணக்கமாக இருக்கிறோம் என்று பேசினால், அவர்கள் நம்மை ரசிப்பார்களா என்றால், ரசிக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் எவ்வளவு காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும். நமக்கென்று ஒரு கொள்கை, ஒரு பாதை என எல்லாமே இருக்கிறது. கூட்டணி என்பது வேறு. தேர்தல் காலங்களில் கூட்டணி வைக்கிறோம். பாசிசத்தை எதிர்க்கும்போது தைரியமாக எதிர்க்கிறோம் .தோழமைகளுடன் சேர்ந்து எதிர்க்கிறோம். நீட் தேர்வை திமுக எதிர்த்தால், காங்கிரஸ் கட்சியும் அந்த தேர்வை எதிர்க்கிறது. இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவித்திருக்கிறோம். அது வேறு... இது வேறு. ஆனால், நம்முடைய கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும். அதேபோல், வாக்கு வங்கியை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து