முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீ விபத்தில் 49 பேர் பலி: நடிகர் விஜய் இரங்கல்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      தமிழகம்
vija7y

Source: provided

சென்னை: குவைத்தின் மாங்காஃப் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 200 பேர் வசித்து வந்தனர். இந்தக் குடியிருப்பின் 6-ஆவது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும்புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் புகை பரவியது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 42 பேர் இந்தியர்கள் என்று அறியப்படுகிறது. 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதில் பெரும்பாலானோர் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்களாவர். பெரும்பாலானோர் கரும்புகை காரணமாக சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அதேவேளையில், குடியிருப்பில் வசித்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது 5 தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.

இதுகுறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து