முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 58.1 சதவீதம் டிஜிட்டல் பணபரிவர்த்தனை : குளோபல் டேட்டா நிறுவனம் தகவல்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      உலகம்
G-Pay 2023-02-25

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளதாக குளோபல் டேட்டா எனும் தரவு ஆய்வு நிறுவனம், தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, குளோபல் டேட்டா எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: "ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாரம்பரிய ரொக்கம் மற்றும் வங்கி பணபரிமாற்றத்துக்கு மாற்றாக ஈ-காமர்ஸ் எனும் மாற்று கட்டண முறை வேகமாக அதிகரித்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொபைல் வாலட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இது பெரும்பாலும் யுபிஐ மூலம் இயக்கப்படுகிறது. க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் பணபரிமாற்றத்தை எளிதாக்குகிறது.

டிஜிட்டல் தீர்வுகள் சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் சீனா முன்னணியில் இருக்கிறது. சீனாவில் ஈ-காமர்ஸ் பரிவர்த்தனை 65 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2018 ல் இது 53.4 சதவீதமாக இருந்தது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியாவும் பின்தங்கவில்லை. 2018-ம் ஆண்டிலிருந்து மாற்று கட்டண முறைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை இந்தியா கொண்டிருக்கிறது. கடந்த 2018-ல் 20.4% ஆக இருந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் 2023-ல் 58.1% ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து