முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாலிபால் விளையாடிய வீரர்கள்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      விளையாட்டு
INDIA-1 2024-06-17

Source: provided

இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வெற்றிகள் இந்திய அணியை சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய வழிவகுத்தது. 

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வருகிற ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையில், இந்திய அணி வீரர்கள் பீச் வாலிபால் விளையாடும் விடியோவை பிசிசிஐ அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளிட்டுள்ளது.

____________________________________________________________________

மன்னிப்பு கேட்ட பாபர் அசாம்

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறத் தவறியதற்காக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.,எங்களை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. இந்த மோசமான விளையாட்டுக்காக மன்னிக்கவும். இங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது. ஆனால் ஒட்டுமொத்தமாக எங்கள் பேட்டிங் கிளிக் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் சில தவறுகளை செய்தோம். 

நீங்கள் விக்கெட்டுகளை இழக்கும்போது, அழுத்தம் உங்கள் மீது அதிகமாகும். நாங்கள் ஒரு அணியாக விளையாடவில்லை. இது ஒரு தனிநபரால் அல்ல, நாங்கள் ஒரு அணியாக தோற்றோம். இது கேப்டன் மட்டுமல்ல. நான் உலகக் கோப்பையில் 11 வீரர்கள் இருப்பதால் ஒவ்வொரு வீரருக்கும் விளையாட முடியாது. ஒரு அணியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். இவ்வாறு பாபர் அசாம் கூறினார். 

____________________________________________________________________

நமிபியா ஆல் ரவுண்டர் ஓய்வு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் வெளியேறியது. நமிபியா அணியின் ஆல்-ரவுண்டராக வலம் வந்த டேவிட் வைஸ், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-  எனக்கு இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால் எனது கடைசி ஆட்டத்தை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதுவும் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக விளையாடியதுடன் நிறைவு செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம். இவ்வாறு டேவிட் வைஸ் குறிப்பிட்டார்.

39 வயதான டேவிட் வைஸ் இதுவரை 15 ஒரு நாள், 54 இருபது ஓவர் போட்டியில் விளையாடி மொத்தம் 74 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வைஸ் முதலில் தங்களது சொந்த நாட்டு அணிக்காக ஆடினார். 2016-ம் ஆண்டில் நமிபியாவுக்கு இடம் பெயர்ந்த அவர் 2021-ம் ஆண்டில் இருந்து நமிபியா அணிக்காக விளையாடி வந்தது நினைவு கூரத்தக்கது.

____________________________________________________________________

83 ரன்களில் இலங்கை வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. நெதர்லாந்து சார்பில் லோகன் வேன் பீக் 2 விக்கெட்டுகளையும், விவியன் கிங்மா, ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் மற்றும் டிம் பிரிங்கில் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக நெதர்லாந்து அணி 16.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை சார்பில் நுவன் துஷாரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர வமிந்து ஹசரங்கா மற்றும் மதீசா பதிரனா தலா 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா மற்றும் தசுன் சனகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி 83 ரன்களில் வெற்றி பெற்றது.

____________________________________________________________________

அயர்லாந்தை வென்ற பாக்., 

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 106 ரன்கள் அடித்தது.  அணியில் அதிகபட்சமாக டெலானி 31 ரன்களும், லிட்டில் 22 ரன்களும் அடித்தனர்.  பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.  

இதனையடுத்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அயர்லாந்து அணியின் அபார பந்துவீச்சால் அணியில் முன்னனி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  இருப்பினும் கேப்டன் பாபர் அசாம் நிலைத்து ஆடினார்.  அதிகபட்சமாக பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார்.  அயர்லாந்து அணி சார்பில் பாரி மெக்க்ரத்தி 3 விக்கெட்டை கைப்பற்றினார்.  இறுதியில் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆறுதல் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து