Idhayam Matrimony

ராகுல் காந்திக்கு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
Rahul-Stalin

Source: provided

சென்னை : நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பியும், இண்டியா கூட்டணியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு நேற்று பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், 

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி. நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுடன் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், ராகுல் காந்தி ஸ்டாலினை சகோதரன் அழைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 11 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 9 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து