முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள்

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்      அரசியல்
PMK 2024-06-19

விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்கள் நேற்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.அந்த வகையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,  விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.இடைத்தேர்தலையொட்டி கடந்த 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நாளை 21-ம்  தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். 

இந்த இடைத்தேர்தலில்,  தி.மு.க. கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். 

இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. செயலாளர்கள் உடன் இருந்தனர். 

பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு சென்னை மெயின்ரோடு வழியாக தாலுகா அலுவலகம் வந்து தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து