முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., பா.ம.க, நா.த.க. வேட்பாளர்கள் சொத்து விவரம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
Abinaya-2024-06-24

Source: provided

விழுப்புரம் : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடை பெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி முடிவடைந்தது.

இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (ஜூன் 24) நடைபெற்றது.

இந்நிலையில், திமுக வேட்பா ளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதா சுடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரிலோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6 ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவா, ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 41 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பாமக வேட்பாளர் அன்புமணிக்கு ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.1 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகை கடன் பெற்றிருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து