முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவது ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      உலகம்
Sunita-Williams 2024-06-25

Source: provided

வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திட்டமிட்டப்படி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (61) ஆகியோர் கடந்த 5-ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

கடந்த 5-ம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, கடந்த 06-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர்.

தற்போது, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது.  சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா கோரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து