முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க கோரி கவர்னரிடம் எடப்பாடி மனு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2024      தமிழகம்
EPS-1 2024-06-25

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பாக  சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.

பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பழனிசாமி கூறியதாவது: 

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரித்தால் நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்கப்பட மாட்டாது. மேலும், இவ்வழக்கில் உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசா ரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும். 

இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தி 800-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.  6000 மேற்பட்ட  சாரய ஊறல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முதலிலே செய்திருந்தால் இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்திருக்காது. 

மேலும் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் இது தொடர்பாக கவன ஈரப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதே இது குறித்து விவாதம் நடத்தி இருந்தால் இந்த மரணங்களை தடுத்திருக்கலாம்.

இந்த சூழலில் கள்ளச் சாராய மரணம் குறித்து நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் வழக்கு சி.பி.ஐ. விசாரித்தாக வேண்டும். அதற்கு கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். அவரும் அந்த மனுவை தீர ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து