முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்டரி காரில் அதிபர் மாளிகையை பிரதமர் மோடிக்கு சுற்றி காட்டிய புடின்

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2024      உலகம்
Modi-Putin 2024-07-09

மாஸ்கோ, பிரதமர் மோடியை பேட்டரி  காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவும், ரஷ்யாவும் நீண்ட கால நட்புறவு கொண்ட நாடாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டு தோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டுத் தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை பலப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தியா - ரஷ்யா இடையிலான, 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றார். 

மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷ்ய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய அதிபர்  புடின் இரவு விருந்து அளித்தார். இந்நிலையில் நேற்று காலை பிரதமர் மோடியை பேட்டரி  காரில் அமர வைத்து, அதிபர் மாளிகை வளாகத்தில் புடின் வலம் வந்தார்.  அப்போது குதிரை தொழுவத்தையும் அவர் பிரதமர் மோடிக்கு காண்பித்தார்.  இந்த வீடியோ  வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து