முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலச்சரிவு: நேபாளத்தில் 60 பேருடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்துகள்: 7 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      உலகம்
Nepal--river-bus-2024-07-12

காத்மண்டு,  மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பேருந்துகளில் 63 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, நேற்று அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. 

இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பேருந்து திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் கூறுகையில், 

நாராயண்காத் - முகிலின் சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் பல பயணிகளை காணவில்லை என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், பயணிகளைத் தேடித் திறம்பட மீட்கும்படி, உள்துறை நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். 

வானிலை மோசமாக இருப்பதால் காத்மாண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும்  ரத்து செய்யப்பட்டுள்ளன.  பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், நாராயண்காட்-முகிலிங் சாலைப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

இந்த நிலையில், ஆற்றில் பஸ்கள் அடித்துச்செல்லப்பட்ட விபத்தில் 7 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற பயணிகளின் நிலை என்ன? என்று தெரியவில்லை. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து